/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சுற்றுசூழலை பாதுகாக்க கலெக்டர் அறிவுரை
/
சுற்றுசூழலை பாதுகாக்க கலெக்டர் அறிவுரை
ADDED : ஆக 20, 2025 01:58 AM
திண்டுக்கல்; ரசாயன வர்ணம் பூசப்படாத விநாயகர் சிலைகளை தேர்வு செய்த நீர்நிலைகளில் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க கலெக்டர் சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது : விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து நீர்நிலைகளில் கரைக்கும்போது சுற்றுச்சூழலை காக்கும் வகையில் ரசாயனம் வர்ணம் பூசப்படாத சிலைகளை கரைக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த அனுமதிக்கப்படாது. சிலைகளில் வர்ணம் பூசுவதற்கு நச்சு , மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது. ரசாயன பொருட்களுக்கு பதிலாக இயற்கை பொருட்களை பயன்படுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைக்க வேண்டும் என்றார்.
விநாயகர் சிலை கரைப்பதற்காக இடங்கள் விபரம் :