தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ முதல் மதிப்பெண் மாணவிக்கு பாராட்டு

 முதல் மதிப்பெண் மாணவிக்கு பாராட்டு

 முதல் மதிப்பெண் மாணவிக்கு பாராட்டு


ADDED : ஜூலை 12, 2026 01:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2026 01:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எரியோடு: எரியோடு தண்ணீர்பந்தம்பட்டி ஸ்ரீமகாவித்யாலயா உயர்நிலைப்பள்ளி மாணவி நந்தினி 2026 பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 496 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம், மாநில அளவில் 3ம் இடம் பிடித்தார். இப்பள்ளி 10 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது.

பள்ளி அளவில் 484 மதிப்பெண்ணுடன் நித்யாஸ்ரீ 2ம் இடம், 477 மதிப்பெண்ணுடன் ஜெயஸ்ரீ 3ம் இடம் பெற்றனர். 400 மதிப்பெண்ணிற்கு மேல் பெற்ற அனைவரையும் பாராட்டி பரிசு வழங்கும் விழா நடந்தது.

மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ஜான் பிரிட்டோ தலைமை வகித்தார். எச்.எம்.பி.எஸ்., அசோசியட்ஸ் ஆடிட்டர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். முதல்வர் சத்தியவாணி வரவேற்றார்.

பள்ளி தாளாளர் சுப்ரமணி, தலைவர் இளங்கோவன், செயலாளர் ரேவதி, பொருளாளர் கதிர்வேல், வேத வித்யா சமூக அறக்கட்டளை உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் லயோலா அருமைராஜ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us