UPDATED : நவ 04, 2026 10:53 AM
ADDED : நவ 04, 2026 10:48 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல் நகரில் மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர செயலாளர் அரபுமுகமது தலைமை வகித்தார். சச்சிதானந்தம் எம்.பி., மாவட்ட செயலாளர் பிரபாகரன் பங்கேற்று பேசினர். அத்தியாவசிய பொருட்கள், காய்கறி விலை உயர்வை கண்டித்து காய்கறிகளை மாலையாக கட்டி கழுத்தில் தொங்கவிட்டு நுாதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய செயலாளர் சரத்குமார், செயற்குழு உறுப்பினர் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோபால்பட்டி பஸ் ஸ்டாண்டில் மாவட்ட குழு உறுப்பினர் பாப்பாத்தி தலைமையிலும், குஜிலியம்பாறையில் ஒன்றியக்குழு உறுப்பினர் பழனிச்சாமி தலைமையிலும், வேடசந்துாரில் ஒன்றியக்குழு உறுப்பினர் பெரியசாமி தலைமையிலும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் பங்கேற்றனர்.
