UPDATED : நவ 04, 2026 10:53 AM
ADDED : நவ 04, 2026 10:49 AM
அ நிறம் | அளவு
நத்தம்: நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 7ம் வகுப்பு மாணவி அட்சயா 12.
இவர் தமிழ் வளர்ச்சித்துறையால் நடத்தப்பட்ட திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்று 1330 திருக்குறளையும் பிழையின்றி ஒப்பு வித்தார்.
தொடர்ந்து சென்னை அருங்காட்சியத்தில் நடந்த விழாவில் அமைச்சர்கள் ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் இம்மாணவிக்கு பாராட்டு சான்றிதழ், ரொக்கப் பரிசு வழங்கினர்.
மாணவியை திருக்குறள் முற்றோதல் இயக்க பயிற்றுநர் கவுரி, ஆசிரியர்கள் பாராட்டினர்.
