த.வெ.க., ஆட்சியை கவிழ்க்க கம்யூ., வி.சி., கட்சிகள் சதி: சொல்கிறார் அர்ஜூன் சம்பத்
த.வெ.க., ஆட்சியை கவிழ்க்க கம்யூ., வி.சி., கட்சிகள் சதி: சொல்கிறார் அர்ஜூன் சம்பத்
UPDATED : அக் 28, 2026 04:04 AM
ADDED : அக் 27, 2026 07:16 PM

வடமதுரை: ''தமிழகத்தில் த.வெ.க., ஆட்சியை கவிழ்க்க கம்யூ., வி.சி., கட்சிகள் சதி செய்கின்றன,'' என, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் ஹிந்து மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தேர்தல் கமிஷனின் எஸ்.ஐ.ஆர்., நடவடிக்கைக்கு பின் நடந்த தேர்தல் மூலமே முதல்வர் விஜய் ஆட்சியை பிடித்தார். கேரளாவில் காங்., ஆட்சிக்கு வந்தது. தோற்றவர்கள் எஸ்.ஐ.ஆர்., மீதும், எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரம் மீதும் குறை கூறுவது உள்நோக்கம் கொண்டது.
ஆன்லைன் கட்சியான கரப்பான் பூச்சி கட்சி தேச விரோதிகளுடன் சேர்ந்து கொண்டு இந்திய தேர்தல் ஜனநாயகத்தை சீர்குலைக்க நினைக்கிறது. இந்தியாவில் ஜனநாயக முறைப்படி தேர்வாகி ஸ்திர தன்மையுடன் இயங்கும் பிரதமர் மோடி ஆட்சியை வங்கதேசம், நேபாளம் போல வீழ்த்த முயற்சிக்கின்றனர்.
தமிழகத்தில் இத்தகைய போராட்டங்களுக்கு முதல்வர் விஜய் அனுமதி தரக்கூடாது. கரப்பான் பூச்சியை ஆதரிக்கும் தி.மு.க., கம்யூ., வி.சி., கட்சிகள் சில மாதங்கள் முன்வரை ஒன்றாக இருந்தவர்கள். தற்போது த.வெ.க., அரசை கவிழ்க்க சதி செய்கின்றனர். இதற்காக கரப்பான் பூச்சி போராட்டத்தை கம்யூ., நடத்துகிறது. கூட்டணியில் இருந்து கொண்டே தனித்து போட்டியிடுகின்றனர். ஜாதி, மத அரசியலில் ஈடுபடும் வி.சி., கட்சியை த.வெ.க., வெளியேற்ற வேண்டும். வளர்ச்சி அரசியலுக்கு எதிரான கம்யூ., கட்சிகளை தடை செய்ய வேண்டும். கம்யூ.,களும், கிறிஸ்தவ மிஷனரிகளும் நடத்திய போராட்டங்களால் தமிழகத்திற்கு வரவேண்டிய பல நல்ல, பெரிய திட்டங்கள் கேரளாவிற்கு சென்றன.
முதல்வர் விஜய் நல்லாட்சி தர வேண்டும். அவர் பல கோயில்களுக்கும் செல்கிறார். நல்ல விஷயம். மகிழ்ச்சி. தீபாவளி பண்டிகை நேரத்தில் உள்நாட்டு உற்பத்தி பொருட்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். சீன பட்டாசுகளை தடை செய்ய வேண்டும்.
நீதிமன்ற உத்தரவுகளின்படி மதுரை திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும். திண்டுக்கல் மலைக்கோட்டையில் கோயில் இருந்தும் சிலை இல்லை. அங்கு அபிராமியம்மன் சிலையை மீண்டும் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றார்.
