UPDATED : அக் 27, 2026 07:29 PM
ADDED : அக் 27, 2026 07:26 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் போக்குவரத்து பணிமனை 1 முன் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய சங்கத் தலைவர் வெங்கிடுசாமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜெயக்குமார், சி.ஐ.டி.யு., செயலாளர் ஜெயசீலன் பங்கேற்று பேசினர்.
அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வரவு, செலவு வித்தியாசத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும், தனியார் மூலம் மின்சார பஸ்களை இயக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்து அரசே முழுமையாக இயக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஓய்வூதியர் சங்க கோட்ட பொதுச்செயலாளர் பால்ராஜ், துணைப் பொதுச்செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
