UPDATED : அக் 27, 2026 07:03 PM
ADDED : அக் 27, 2026 06:58 PM
அ நிறம் | அளவு
நத்தம்: நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஊராட்சி செயலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய ஆணையாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். பி.டி.ஓ., முருகேஸ்வரி முன்னிலை வகித்தார்.
மழைக்காலங்களில் ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்செரிக்கை பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மண்டல துணை பி.டி.ஓ.,க்கள் இஸ்மாயில், கிப்டன், அசோக்குமார், சுரேஷ், சுகாதார ஆய்வாளர்கள், ஊராட்சி செயலர்கள் பங்கேற்றனர்.
