ADDED : ஜூலை 17, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி: உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் கலைவாணி தலைமையில் அலுவலர்கள் செல்வம், வசந்தன், சாணார்பட்டி போலீசார் வீரசின்னம்பட்டி ரோட்டில் இயங்கி வந்த மளிகை கடைகளில் சோதனை நடத்தினர்.
மளிகை கடை உரிமையாளர் ஜெயலட்சுமி 52, வீட்டில் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அப்பகுதி ரோஜா பேகம், உமர்தீன் மளிகை கடைகளில் தலா 1 கிலோ புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து 3 கடைகளும் சீல் வைக்கப்பட்டன.