ADDED : ஆக 14, 2026 09:11 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், ஆக.15
உத்தரகண்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இழிவுபடுத்தப்பட்டதை கண்டித்து திண்டுக்கல் காமராஜர் சிலை பூங்கா வளாகத்தில் மாநகர மாவட்ட காங்., சார்பில் போராட்டம் நடந்தது. மாநகர மாவட்ட தலைவர் துரைமணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் காஜாமைதீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாஹிர்உசேன், பகுதி செயலாளர்கள் அப்பாஸ்மந்திரி, பரமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் உதயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இறுதியில் மல்லிகார்ஜூன கார்கேவின் 30 அடி உயர உருவப்படத்திற்கு பாலாபிஷேகம் செய்தனர்.
