ADDED : டிச 25, 2024 07:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவு செய்ததாக கூறி திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்., சார்பில் திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா பகுதியில் இருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் வந்தனர்.
கலெக்டர் பூங்கொடியிடம் மாநகர காங்., தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் மனு அளித்தனர்.
மாவட்ட இளைஞர் காங்., தலைவர் முகமது அலியார், மேற்கு மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி, பொது கணக்கு குழு உறுப்பினர் சிவாஜி, மாவட்ட செயலாளர் வேங்கை ராஜா உடனிருந்தனர்.

