ADDED : ஆக 15, 2025 02:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: மத்திய அரசு, இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், பிரதமர் மோடி பதவி விலக வலியுறுத்தி திண்டுக்கல்லில் மாநகர காங்., சார்பில்திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் காமராஜர் சிலை அருகே மெழுகுவர்த்தி ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.
காந்தி மார்க்கெட் ரோட்டில் உள்ள விநாயகர் கோயில் அருகே ஊர்வலம் நிறைவடைந்தது. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமை வகித்தார். பகுதி செயலாளர்கள் பரமன், அப்பாஸ் ,மந்திரி நாகலட்சுமி முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைத் தலைவர்கள் காஜாமைதீன், முகமது அலியார், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவாஜி கலந்து கொண்டனர்.