UPDATED : அக் 22, 2026 08:11 PM
ADDED : அக் 22, 2026 08:06 PM
அ நிறம் | அளவு
நத்தம்: நத்தம் தாலுகா அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடந்தது. தாசில்தார் டேனியல் பிரேம்குமார் தலைமை வகித்தார். தேர்தல் பிரிவு தனித்துணை தாசில்தார் பாமா, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பார்த்திபன் முன்னிலை வகித்தனர்.
நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் 1200-க்கு மேல் வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளை மறு சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
