UPDATED : அக் 23, 2026 04:54 AM
ADDED : அக் 22, 2026 10:10 PM

அ நிறம் | அளவு
நத்தம்: நத்தம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை தேங்காய் மறைமுக ஏலம் நடந்தது. விற்பனைக் கூட மேற்பார்வையாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். தேங்காய் பருப்பின் தரத்திற்கேற்ப அதிகபட்சமாக கிலோ ரூ.158.50-க்கும் குறைந்தபட்சமாக ரூ.120-க்கும் ஏலம் போனது. 6 ஆயிரத்து 880 கிலோ கொப்பரை தேங்காய்கள் வரப் பெற்றதில் ரூ.10.14 லட்சத்திற்கு ஏலம் போனது.
இளநிலை உதவியாளர் பாலமுருகன், மண்டி ஆய்வாளர் முத்துக்குமார், சுற்றுவட்டார விவசாயிகள், உள்ளூர், வெளி மாவட்ட வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
