/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மின்வாரிய அலுவலர்களின் அலட்சியத்தால் நுகர்வோர்... அலைக்கழிப்பு: மின் இணைப்புகள் ஒருங்கிணைத்ததில் குளறுபடி புகார்
/
மின்வாரிய அலுவலர்களின் அலட்சியத்தால் நுகர்வோர்... அலைக்கழிப்பு: மின் இணைப்புகள் ஒருங்கிணைத்ததில் குளறுபடி புகார்
மின்வாரிய அலுவலர்களின் அலட்சியத்தால் நுகர்வோர்... அலைக்கழிப்பு: மின் இணைப்புகள் ஒருங்கிணைத்ததில் குளறுபடி புகார்
மின்வாரிய அலுவலர்களின் அலட்சியத்தால் நுகர்வோர்... அலைக்கழிப்பு: மின் இணைப்புகள் ஒருங்கிணைத்ததில் குளறுபடி புகார்
ADDED : ஆக 21, 2025 11:57 PM

தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிப்படி வீட்டு உபயோக மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கீடு செய்யப்படுவதால் சம்பந்தப்பட்ட இடைவெளியில் 100 யூனிட் மட்டுமே இலவச உபயோகமாக(மானியம்) அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும் மின் கட்டண கணக்கீட்டில் 101 முதல் 200, 201 முதல் 400 , 401 துவக்கி 500 வரை என பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டண விகிதத்தை மாற்றி வசூல் நடக்கிறது. இது தவிர முன்னறிவிப்பற்ற கட்டண அதிகரிப்பும் ஏழை, நடுத்தர குடும்பங்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது.
இந்நிலையில் ஒரே கட்டடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்பு மூலம் முறைகேடு நடப்பதை தடுக்க முறைகேடாக பெறப்பட்ட இணைப்புகளை ஒன்றிணைக்க சில மாதங்களுக்கு முன் அரசு உத்தரவிட்டது. இதற்காக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது. ஒரே கட்டடமாக இருப்பினும் தரைதளம், மேல்த்தளம், இரு கட்டடங்களுக்கு தனித்தனி நுழைவாயில், தனித்தனி குடும்பங்கள் வசிக்கும் இடம் ஆகியவற்றில் வெவ்வேறு மின் இணைப்புகளை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்பட்டது. ஆனால் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மின்வாரிய அலுவலர்கள் பலர் வழிகாட்டுதல் நெறிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என புகார் எழுந்துள்ளது. பல இடங்களில் தனித்தனி தளங்கள், குடியிருப்புகள் கொண்ட கட்டடங்களில் வீட்டு மின்இணைப்புகளை ஒன்றிணைத்து உள்ளனர். தனி குடும்பங்கள், வாடகைதாரர்கள் என ஆதார் விபரங்கள் வழங்கப்பட்டிருந்த போதும் அவற்றை ஒரே இணைப்பில் மாற்றிய அவலம் அரங்கேறி உள்ளது.
இது போன்ற குளறுபடிகளால் வீட்டு உபயோக மின் பயன்பாட்டிற்கும் வணிக அளவில் மின் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பாதிப்படைந்த பலர் மின்வாரிய அதிகாரியிடம் பலமுறை முறையிட்டும் தீர்வு கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். சில இடங்களில் மின் ஊழியர்கள், அலுவலர்கள், ஒப்பந்த நிலை ஊழியர்கள் இப்பிரச்னையை சரி செய்து தருவதாக கூறி முறைகேடான வசூலில் ஈடுபட்டுள்ளதால் அதிருப்தி அதிகரித்து வருகிறது.மாவட்ட நிர்வாகம் மின் வாரிய செயல்பாடுகளில் நிலவும் குளறுபடிகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.