ADDED : பிப் 28, 2024 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் ஜல்லிப்பட்டி பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் முத்துராமலிங்கம்.இவரது வீட்டில் வெடிகுண்டு வீசிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்கள் இன்றி நீதிமன்றம் வெறிச்சோடியது.
இன்றும் புறக்கணிப்பு போராட்டம் நடக்க உள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

