ADDED : டிச 30, 2024 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை : பாளையம் குஜிலியம்பாறை ரோடு பாளையம் பஸ் ஸ்டாப் அருகே உள்ள பாலத்தின் நுழைவுப் பகுதி உயரமாகவும், தார் ரோடு பள்ளமாகவும் உள்ளது.
இதனால் இங்கு அடிக்கடி வாகன விபத்துக்கள் நடப்பதும் பலர் கீழே விழுந்து காயங்களுடன் செல்வதும் தொடர்கதையாகவே உள்ளது.
இந்த வழித்தடத்தில் செல்லும் டூவீலர் வாகன ஓட்டிகளின் நலன் கருதி, இந்த இடத்தில் தார் கொண்டு ரோடை சரி செய்ய வேண்டும்.

