sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

3 நாளாக தொடர்ந்த மழை: மக்களின் இயல்புநிலை பாதிப்பு

/

3 நாளாக தொடர்ந்த மழை: மக்களின் இயல்புநிலை பாதிப்பு

3 நாளாக தொடர்ந்த மழை: மக்களின் இயல்புநிலை பாதிப்பு

3 நாளாக தொடர்ந்த மழை: மக்களின் இயல்புநிலை பாதிப்பு


ADDED : டிச 15, 2024 06:08 AM

Google News

ADDED : டிச 15, 2024 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 3 தினங்களாக இடைவிடாது பெய்த தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

மாவட்டத்தில் டிச. 12, 13ல் கனமழை முதல் மிக கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி டிச. 12 அதிகாலையில் தொடங்கிய மழை இடைவிடாது பெய்தது. சூரிய வெளிச்சத்தை காணமுடியவில்லை. வானம் இருள் சூழ்ந்தே காணப்பட்டது.

மழையும் பெய்தபடியே இருந்தது. பழநி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து ரோடுகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பின.

ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது . மழையுடன் பனியும் சேர வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.

வேலைக்குச் செல்வோர் பலரும் நனைந்தபடியே சென்றனர். பெரும்பாலான மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கினர். மழை சிறிதும் இடைவிடாதபடியே பெய்து கொண்டே இருந்ததால் பலர் குடைகளை ஏந்தியபடியே சென்றனர். திண்டுக்கல் பூ மார்க்கெட் வியாபாரிகள் பூக்களை ஏற்றி, இறக்க பெரும்பாடு பட்டனர்.

காந்தி மார்க்கெட் வியாபாரிகள் மழையால் காய், பழங்களை பாதுகாக்க மட்டுமே முடிந்தது. மக்கள் முடங்கியதால் வியாபாரம் பாதிக்கப்பட்டது. பழநிக்கு வந்திருந்த ஐயப்ப பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கொடைக்கானலில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது.

நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் 325 மி.மீ., மழையளவு பதிவாகியிருந்தது. அதிகபட்சமாக கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 62.50 மி.மீ., ரோஸ் கார்டனில் 72 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. நேற்று மதியம் 12:00 மணிக்கு மேல் தான் சூரிய வெளிச்சம் வந்ததால் 2 தினங்களாக இருளில் மூழ்கிய மக்கள் சற்று பெருமூச்சு விட்டனர். இருப்பினும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையே நிலவி வருகிறது. வெயில் லேசாக அடித்தாலும் அவ்வப்போது துாரல் விழுந்த வண்ணம் இருந்தது.

கோபால்பட்டி அருகே கே.அய்யாபட்டி சாலை செடிப்பட்டிபிரிவில் முருகேசன் 45, சொந்தமான மாங்காய் கமிஷன் மண்டி உள்ளது.

தற்போது மாங்காய் சீசன் இல்லாததால் இதில் மாடுகளை கட்டி வளர்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று பெய்த மழையால் மாங்காய் கமிஷன் மண்டி சரிந்து விழுந்தது.

மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றதாலும், அதிர்ஷ்டவசமாக அங்கு யாரும் இல்லாததாலும் பாதிப்புகள் இல்லை.

ஒட்டன்சத்திரம் பகுதியில் மூன்று நாட்களாக கனமழை பெய்த நிலையில் பரப்பலாறு அணை நிரம்பியது.இதை தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீரின் ஒரு பகுதி நங்காஞ்சி ஆற்றில் திருப்பி விடப்படுகிறது. அணை நீர், காட்டாற்று வெள்ளம் காரணமாக ஸ்ரீரங்க கவுண்டன்புதுார் அருகிலுள்ள ராமசமுத்திரம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது. கண்மாயிலிருந்து வெளியேறும் உபரி நீர் ஜவ்வாதுபட்டி பெரியகுளத்திற்கு செல்கிறது. கண்மாய் நிரம்பி உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து சுற்று பகுதியில் உள்ள நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் வேளாண் தொழில் நடக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பன்றிமலை ரோட்டில் அமைதிச்சோலை அடுத்த 4வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் 2 நாட்களுக்கு முன் நிலச்சரிவு ஏற்பட்டது. பாறை கற்களுடன் மண் சரிந்து நடுரோட்டில் தேங்கிய நிலையில் இவ்வழித்தடத்தில் அனைத்து வகையான போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் இயந்திரம் மூலம் சீரமைப்பு பணியும் நடக்க போக்குவரத்து சீரானது.

இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை 6 வது கொண்டை ஊசி வளைவில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. மரங்களுடன் நடுரோட்டில் கற்களும் விழுந்ததால் மீண்டும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதனை சீரமைத்த நிலையில் நேற்று காலை மீண்டும் 4வது வளைவு ரோட்டோர பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த வழித்தடத்தில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

சர்வீஸ் ரோட்டில் தேங்கி நிற்கும் மழைநீர்


ஒட்டன்சத்திரம் புதிய பைபாஸ் ரோட்டிலிருந்து தாராபுரம் வழித்தடத்திற்கு செல்லும் சர்வீஸ் ரோட்டில் போதுமான அளவிற்கு வடிகால் வசதி இல்லாததால் மூன்று நாட்களாக மழைநீர் வெளியேற வழி இல்லாமல் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர்.

லெக்கையன்கோட்டையிலிருந்து பொள்ளாச்சி வரை புதிய பைபாஸ் ரோடு போடப்பட்டுள்ளது.

மதுரை திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து கோவை திருப்பூர் செல்லும் வானங்கள் இந்த பைபாஸ் ரோட்டில் இருந்து பிரிந்து சர்வீஸ் ரோட்டில் செல்ல வேண்டும்.

மூன்று நாட்களாக இப்பகுதியில் இடைவிடாமல் பெய்த மழை காரணமாக வந்த காட்டாற்று வெள்ளம் வெளியேற போதிய வடிகால் வசதி இல்லாததால் சர்வீஸ் ரோடு பகுதியில் குளம் போல் தேங்கி நிற்கிறது.

இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் இதனை கடந்து சென்ற வாகனங்களின் இன்ஜினுக்குள் மழைநீர் புகுந்ததால் வழியில் பழுதாகி நின்றன.

சர்வீஸ் ரோட்டில் போதுமான வடிகால் வசதியை ஏற்படுத்தி மழை காலத்தில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழையால் உடைந்த குளம் தீவான கிராமம்


கொடைக்கானல்:- மன்னவனுார் கீழானவயல் பகுதியில் உள்ளது புலி பிடித்த ஓடை குளம். சில தினங்களாக பெய்த கனமழையால் நீர் நிரம்பிய நிலையில் நேற்றிரவு கரை உடைந்து தண்ணீர் வெளியேறியது.

இக்குளம் மூலம் 500 ஏக்கர் நிலம் பாசன வசதியும், 200க்கு மேற்பட்ட குடும்பத்தினருக்கு குடிநீர் தேவைக்கும் பயன்பட்டது. பராமரிப்பில்லாத இக்குளத்தின் கரை உடைந்து தண்ணீர் வெளியேறிதால் கீழானவயல் மன்னவனுார் செல்லும் ரோடு துண்டிக்கப்பட்டு கிராமமே தீவாக மாறி உள்ளது.






      Dinamalar
      Follow us