/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கட்டுப்படுத்துங்க: அதிவேகமாக நகருக்குள் வலம் வரும் வாகனங்களை: தொடரும் விபத்துக்களால் பாதிக்கும் அப்பாவிகள்

ADDED : ஜன 07, 2025 05:24 AM

பழநி: திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் ரோடுகளில் அதிவேகத்துடன் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதைக்கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் தனியார், அரசு பஸ்கள்,வாகனங்களின் போக்குவரத்திற்கு நான்கு வழிச்சாலை,புறவழிச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் தனி பாதை சேதமடைந்துள்ளது. இதனால் பக்தர்கள் ரோட்டில் இறங்கி நடக்கின்றனர். இந்நிலையில் ரோட்டோரங்களில் நடந்து வரும் பக்தர்கள் வெகு துாரம் நடந்து வருவதால் மிகவும் மெதுவாக நடக்கின்றனர். அரசு ,தனியார் பஸ்களின் வேகம் அதிகம் உள்ளது. அதனை குறைக்க வேண்டும். கார்,கனரக வாகனங்களின் வேகமும் அதிகரித்து வருகிறது. தனியார் வாகனங்களில் ஏர் ஹாரன்களை பயன்படுத்தி வருவதால் பக்தர்கள் அச்சத்துடன் பயணிக்கும் சூழல் ஏற்படுகிறது. இதனால் பல பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத்தடுக்க வேண்டும்.
வாக்குவாதம் ஏற்படுகிறது
பழநி பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சண்முக நதி அருகே வரும்போது துார பயணத்தால் மிகவும் சோர்வடைகின்றனர். இவர்கள் உடனடியாக வேகமாக நடந்து செல்ல முடிவதில்லை. வாகனங்கள் அதிவேகத்துடன் வந்தாலோ, அதிக சத்தத்துடன் ஹாரன் அடித்தாலோ இவர்களால் உடனே விலக முடிவதில்லை. இதனால் அவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சில சமயங்களில் வாகன ஓட்டுனர்களுடன் பக்தர்களுக்கு வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால் பக்தர்கள் மன உளைச்சல் அடைகின்றனர். எனவே பாரத யாத்திரை வரும் பக்தர்களின் பாதையில் வாகனங்களை குறைந்த வேகத்திலும் ஏர் ஹாரன்களை பயன்படுத்தாமல் சாதாரண ஹாரன்களை பயன்படுத்த வேண்டும்.
பிரகாஷ், டீக்கடை உரிமையாளர், சண்முக நதி.
.....................