UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 09:46 PM
அ நிறம் | அளவு
நத்தம்: நத்தம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் மறைமுக ஏலம் நடந்தது. விற்பனைக் கூட மேற்பார்வையாளர் மாரிமுத்து தலைமை வகித்தார்.
தேங்காய் பருப்பின் தரத்திற்கேற்ப அதிகபட்சமாக கிலோ ரூ.148-க்கும் குறைந்தபட்சமாக ரூ.125-க்கும், தேங்காய் தொட்டி கிலோ அதிகபட்சமாக ரூ.29க்கும் குறைந்தபட்சமாக ரூ.28.10-க்கும் ஏலம் போனது. 2576 கிலோ கொப்பரை தேங்காய்கள் வரப்பெற்று ரூ.3.50 லட்சத்திற்கு ஏலம் நடந்தது.
இளநிலை உதவியாளர் பாலமுருகன், மண்டி ஆய்வாளர் முத்துக்குமார், சுற்றுவட்டார விவசாயிகள், உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் பங்கேற்றனர்.
