ADDED : அக் 21, 2026 08:00 PM
அ நிறம் | அளவு
வடமதுரை: அய்யலுார் தங்கம்மாபட்டியில் செயல்படும் வடமதுரை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது.
கண்காணிப்பாளர் அங்காளஈஸ்வரி தலைமை வகித்தார். கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ.157 குறைந்தபட்சமாக ரூ.150 என ஏலம் போனது. மொத்தம் 48 மூடைகளாக 2 ஆயிரத்து 245 கிலோ கொப்பரை ரூ.3 லட்சத்து 52 ஆயிரத்து 450-க்கு ஏலம் போனது.
