/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நான்கு ஆண்டுகளாக ஒன்றிய கூட்டத்திற்கு வராத கவுன்சிலர்
/
நான்கு ஆண்டுகளாக ஒன்றிய கூட்டத்திற்கு வராத கவுன்சிலர்
நான்கு ஆண்டுகளாக ஒன்றிய கூட்டத்திற்கு வராத கவுன்சிலர்
நான்கு ஆண்டுகளாக ஒன்றிய கூட்டத்திற்கு வராத கவுன்சிலர்
ADDED : டிச 07, 2024 06:42 AM
பழநி: பழநி ஒன்றிய கவுன்சில் கூட்டத்திற்கு நான்கு ஆண்டுகளாக வராத நிலையில்
கணவரே பங்கேற்று கையெழுத்திட்டதாக இறுதி கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர் குற்றம் சாட்டி உள்ளார்
பழநி ஒன்றிய கவுன்சில் கூட்டம் தலைவர் ஈஸ்வரி தலைமையில் நேற்று நடைபெற்றது. பி.டி.ஓ வேதா முன்னிலை வகித்தார். கவுன்சில் இறுதி கூட்டம் நடந்த நிலையில், இதில் பங்கேற்ற 18 வது வார்டு( கரடிகூட்டம்) கவுன்சிலர் முனீஸ்வரி கூறியதாவது : 2019 தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற்று கவுன்சிலராக உள்ளேன். வெற்றி பெற்ற பின் முன்று கவுன்சில் கூட்டத்தில் மட்டும் பங்கேற்று உள்ளேன். அதன் பிறகு கவுன்சில் கூட்டத்திற்கு அழைப்பு வரவில்லை.
அதனால் பங்கேற்கவில்லை. குடும்ப பிரச்னை காரணமாக வெளியூர் சென்ற நிலையில் தற்போது ஊர்வந்து கூலி வேலை பார்த்து வருகிறேன், இறுதி கூட்டம் என்பதை தெரிந்து இதில் கலந்து கொண்டேன். நான்கு ஆண்டுகளாக எனது கணவர் தான் கூட்டத்தில் கலந்து கொண்டு கையெழுத்திட்டுள்ளார். இது குறித்து கணவர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளேன். அதிகாரியும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார் என்றார்.