ADDED : டிச 31, 2024 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலசமுத்திரம்: பழநி சண்முகபுரத்தை சேர்ந்த ராதா கிருஷ்ணன் 54. இவரது தோட்டம் பாலசமுத்திரம் செம்மேட்டுப்பாறை அருகே உள்ளது. இங்கு கட்டி வைக்கப்பட்ட பசுமாடு திருடு போனது.
பழநி தாலுகா போலீசாரிடம் புகாரளித்த நிலையில் விசாரணையில் பாலசமுத்திரத்தை சேர்ந்த சின்னத்துரை 27,அங்குசாமி 43 ஆகியோர் மாடு திருடியது தெரிந்தது.
இருவரையும் போலீசார் கைது செய்தனர்.