/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோடுகளில் உலா வரும் மாடுகள்; அலறும் வாகன ஓட்டிகள்
/
ரோடுகளில் உலா வரும் மாடுகள்; அலறும் வாகன ஓட்டிகள்
ADDED : மே 08, 2025 03:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மாவட்டத்தில் கால்நடைகள் ரோடு ,தெருக்களில் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. வாகனங்கள் வரும் போது மிரண்டு ஓடுவதால் விபத்துக்கள் அதிகரிக்கின்றன. வாகன ஓட்டிகளும் பதறுகின்றனர்.
சில இடங்களில் ரோடுகளின் நடுவில் ஓய்வு எடுக்கும் நிலையும் தொடர்கிறது .மாடுகளை பிடித்து அபாராதம் விதிப்பதாக கூறும் உள்ளாட்சிகள் அறிவிப்போடு சரி .தொடர் நடவடிக்கை இல்லாததால் இந்நிலை தொடர்கிறது .இனியாவது இதன் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.

