/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
செல்பி மோகத்தால் விபத்து: தேவை விழிப்புணர்வு
/
செல்பி மோகத்தால் விபத்து: தேவை விழிப்புணர்வு
ADDED : நவ 09, 2024 04:41 AM

கொடைக்கானல் : கொடைக்கானல் ,தாண்டிக்குடி மலைப் பகுதியில் அபாயகரமான பகுதியில் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள டால்பின் நோஸ், பாம்பார்அருவி, தொப்பி தூக்கும் பாறை உள்ளிட்ட பகுதிகளில் ஆபத்தை உணராது செல்பி மோகத்தில் அபாயகரமான பகுதியை கடந்து போட்டோ எடுக்கும் சூழலை காண முடிகிறது.
தாண்டிக்குடி மலை பகுதியில் புல்லா வெளி அருவிக்கு ஏராளமான பயணிகள் வருகை தரும் நிலையில் மலை ரோட்டில் ஆங்காங்கே உள்ள மலைச்சரிவுகளில் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. விபரீதம் என தெரிந்தும் ஆபத்தை உணராது இது போன்ற பகுதிக்கு செல்கின்றனர். சுற்றுலாத்துறை,போலீசார் செல்பியால் ஏற்படும் விபரீதம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.