/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிரிக்கெட் : கொடைக்கானல் வெற்றி
/
கிரிக்கெட் : கொடைக்கானல் வெற்றி
ADDED : ஜூன் 13, 2025 03:01 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் கொடைக்கானல் யங்ஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்றது.
கே.கே.ஆர்., நடராஜன் பார்வதி அம்மாள் கோப்பைக்கான 3 வது டிவிஷன், மது ஸ்கேன்ஸ் அண்ட் ஸ்பெஷாலிட்டி லேப் கோப்பைக்கான 4 டிவிஷன் போட்டிகள் பி.எஸ்.என்.ஏ., ரிச்மேன் மைதானங்களில் நடந்தது. கொடைக்கானல் லெவன் அணி 23.5 ஓவர்களில் 106 க்கு ஆல்அவுட் ஆனது.
முத்துகாமாட்சி, கபிலன் தலா 3 விக்கெட். சேசிங் செய்த திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி அணி 17 ஓவர்களில் 109/5 எடுத்து வென்றது.
திண்டுக்கல் மெஜஸ்டிக் சிசி அணி 25 ஓவர்களில் 139/9. கன்வால்கிேஷார் 46, உதயகுமார் 3 விக்கெட்.
சேசிங் செய்த லெவன் ஸ்டார் சிசி அணி 23.5 ஓவர்களில் 84 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. தனிஷ், சந்தோஷ்ராஜ் தலா 3 விக்கெட்.
பழநி சுப்ரமணியா சிசி அணி 25 ஓவர்களில் 170/6. மணிரத்தினம் 49(நாட்அவுட்), ஆரோக்கியஜான்சன் 38. சேசிங் செய்த திண்டுக்கல் சாம்பியன்ஸ் சிசி அணி 15.4 ஓவர்களில் 99 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. மாரிமுத்து 4, ஆரோக்கியஜான்சன் 3 விக்கெட்.
திண்டுக்கல் ஏஞ்சல்காஸ்டர்ஸ் சிசி அணி 25 ஓவர்களில் 179/9. வினோத்குமார் 32, ஜெய்விக்னேஷ், அப்துல்சலாம் தலா 3 விக்கெட்.
சேசிங் செய்த கொடைக்கானல் யங்ஸ்டர்ஸ் சிசி அணி 24.1 ஓவர்களில் 180/8 எடுத்து வென்றது. தினேஷ்கார்த்திக் 48, கணேஷ் 39(நாட்அவுட்).