/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிரிக்கெட் லீக்; 'கொடை' கிரவுண்ட் பிரண்ட்ஸ் அணி வெற்றி
/
கிரிக்கெட் லீக்; 'கொடை' கிரவுண்ட் பிரண்ட்ஸ் அணி வெற்றி
கிரிக்கெட் லீக்; 'கொடை' கிரவுண்ட் பிரண்ட்ஸ் அணி வெற்றி
கிரிக்கெட் லீக்; 'கொடை' கிரவுண்ட் பிரண்ட்ஸ் அணி வெற்றி
ADDED : பிப் 18, 2024 01:23 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் கொடைக்கானல் பவான்ஸ் பள்ளியில் நடந்த பவான்ஸ் கோப்பைக்கான லீக் போட்டியில் கொடைக்கானல் கிரவுண்ட் பிரண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
கொடைக்கானல் கிரவுண்ட் பிரண்ட்ஸ் சி.சி. அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 161ரன்கள் எடுத்தது. விமல்58(நாட்அவுட்) ரன்கள், மஹாஷூன் 3 விக்கெட் எடுத்தனர்.சேசிங் செய்த கொடைக்கானல் லேக் பிரண்ட்ஸ் சி.சி.அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 142ரன்கள் மட்டுமே எடுத்தது. சண்முகம் ஜோன்ஸ் 40, ரெனால்ட்பிரான்சிஸ் 36ரன்கள் எடுத்தனர்.
கொடைக்கானல் டேஞ்சரஸ் லெவன் சி.சி.அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 179ரன்கள் எடுத்தது. விஜய் 89 ரன்கள் எடுத்தார்.
கொடைக்கானல் லயன்ஸ் சி.சி.அணியும் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 179ரன்களே எடுத்ததால் போட்டி சமநிலையில் முடிந்தது. சாலமன் ராஜா 64, சூர்யபிரதாப் 31(நாட்அவுட்)ரன்கள் எடுத்தனர்.
கொடைக்கானல் கிரவுண்ட் பிரண்ட்ஸ் சி.சி. அணி 20 ஓவரில் 9விக்கெட் இழந்து 149ரன்கள் எடுத்தது. குபேந்திரன்31, ரெம்ஜித்ராஜா 49ரன்கள், வினித் 3 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த கொடைக்கானல் பால்கன்ஸ் சி.சி. அணி 20ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 129ரன்கள் மட்டுமே எடுத்தது. வினித் 35, ஜெயபிரகாஷ் 3 விக்கெட் எடுத்தனர். கொடைக்கானல் யங்ஸ்டர்ஸ் சி.சி. அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழந்து 202ரன்கள் எடுத்தது. அருண்குமார் 106, ரமேஷ் 37ரன்கள் எடுத்தனர். சேசிங் செய்த ரைனோஸ் கிரிக்கெட் கிளப் அணி 15 ஓவர்களில் 51 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது.