sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கிரிக்கெட் லீக்; ஸ்கில் அணி வெற்றி

/

கிரிக்கெட் லீக்; ஸ்கில் அணி வெற்றி

கிரிக்கெட் லீக்; ஸ்கில் அணி வெற்றி

கிரிக்கெட் லீக்; ஸ்கில் அணி வெற்றி


ADDED : மே 05, 2025 05:19 AM

Google News

ADDED : மே 05, 2025 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான டேக்-டி.டி.சி.ஏ., கிரிக்கெட் லீக் போட்டியில் எரியோடு ஸ்கில் அணி வெற்றி பெற்றது.

திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பைக்கான முதல் டிவிசன், ேஹாட்டல் பார்சன்ஸ் கோர்ட் கோப்பைக்கான 3 வது டிவிசன், மது ஸ்கேன்ஸ் அண்ட் ஸ்பெஷாலிட்டி லேப் கோப்பைக்கான 4 வது டிவிசன் போட்டிகள் என்.பி.ஆர்., பி.எஸ்.என்.ஏ., ரிச்மேன், ஆர்.வி.எஸ்., மைதானங்களில் நடந்தது.

வேடசந்துார் ஜாஹீர் சிசி அணி முதலில் பேட்டிங் செய்து 45 ஓவர்களில் 282/7. இளையராஜா 126, மதன்குமார் 48, ராஜேஷ்கண்ணன் 39. சேசிங் செய்த நத்தம் என்.பி.ஆர்., சிசி அணி 36.2 ஓவர்களில் 135 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. உதயகுமார் 41, அருண்குமார் 29, மதன்குமார் 4, இளையராஜா 3 விக்கெட்.

முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் ஜூனியர்ஸ் சிசி அணி 48.1 ஓவர்களில் 236 க்கு ஆல்அவுட் ஆனது. முகேஷ்வரன் 77, அஜித்மணி 28, கோபிநாத் 3 விக்கெட். சேசிங் செய்த ஆரஞ்ச் சிசி அணி 25.3 ஓவர்களில் 109 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. விஸ்வநாதன் 39, ஜெயந்த் 3 விக்கெட்.

பழநி சுப்ரமணியா சிசி அணி முதலில் பேட்டிங் செய்து 25 ஓவர்களில் 168/8. அவினேஷ் 53, துர்காபிரசாந்த் 34, குமரவேல் 3 விக்கெட்.

சேசிங் செய்த திண்டுக்கல் சேலஞ்சர்ஸ் சிசி அணி 25 ஓவர்களில் 165 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. குமரவேல் 44, பிரபு 3 விக்கெட்.

முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் சச்சின் சிசி அணி 27 ஓவர்களில் 151/5. தினேஷ்குமார் 51(நாட்அவுட்), ேஷக்பரீத் 31. சேசிங் செய்த காட்சன் சிசி அணி 24.5 ஓவர்களில் 152/6 எடுத்து வென்றது. சுந்தரையா 47(நாட்அவுட்), ேஷக்பரீத் 3 விக்கெட்.

எரியோடு ஸ்கில் சிசி அணி முதலில் பேட்டிங் செய்து 22.5 ஓவர்களில் 184 க்கு ஆல்அவுட் ஆனது. உதயகனி 51, சந்தோஷ்குமார் 4 விக்கெட். சேசிங் செய்த யங்ஸ்டர்ஸ் சிசி அணி 20.4 ஓவர்களில் 128 ஆல்அவுட் ஆகி தோற்றது. மதன்குமார் 31, ரமேஷ் 4 விக்கெட்.

முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி அணி 25 ஓவர்களில் 137/6. மோனிஷ்குமார் 45, கவ்னால்கிேஷார் 3 விக்கெட். சேசிங் செய்த மெஜஸ்டிக் சிசி அணி 24.5 ஓவர்களில் 139/7 எடுத்து வென்றது. செந்தில்குமார் 30(நாட்அவுட்), கமல் 3 விக்கெட்.






      Dinamalar
      Follow us