/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிரிக்கெட் லீக்: விக்னேஷ் அணி வெற்றி
/
கிரிக்கெட் லீக்: விக்னேஷ் அணி வெற்றி
ADDED : ஜன 09, 2024 05:47 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் 16 வயதிற்குட்பட்ட ஸ்ரீமதி கோப்பைக்கான போட்டிகள் நடந்தது.
ஜன. 6 ம் தேதி தொடர்ங்கிய தொடரின் முதல் போட்டி பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி மைதானத்தில் நடந்தது. பழநி யுவராஜ் எஸ்.வி.எம்., அகாடமி அணியும் திண்டுக்கல் டி.சி.ஏ., வுமென்ஸ் விங்க்ஸ் அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த பழநி அணி 40 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய திண்டுக்கல் டி.சி.ஏ., அணி 39 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அணியின் சார்பில் அதிகபட்சமாக விஸ்வஹரிணி 3 விக்கெட், ஜெய சிவ ஸ்ரீ 50 ரன்களும் எடுத்தனர்.
ஜன. 7ம் தேதி ஸ்ரீவீ மைதானத்தில் நடந்த சாய் புட்ஸ் கிரிக்கெட் அகாடமி அணிக்கு எதிரான போட்டியில் பழநி யுவராஜ் எஸ்.வி.எம்., அகாடமி அணி 41.4 ஓவர்களுக்கு 139 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நதின்குமார், எழிலரசன் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.
பேட்டிங் அணியில் அதிகபட்சமாக பசீர் ரஹ்மான் 41 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய சாய் புட்ஸ் கிரிக்கெட் அணி 32.5 ஓவர்களில் 67 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது. மலையாளசாமி 6 விக்கெட் எடுத்தார்.
ஆர்.வி.எஸ்., மைதானத்தில் நடந்த 3 வது போட்டியில் வத்தலகுண்டு, ஜெயசீலன் மேல்நிலைப்பள்ளி அணி, வடமதுரை மாஸ்டர்ஸ் சிசி அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த வத்தலகுண்டு அணி 47 ஓவர்களுக்கு 171 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது. அஸ்வின் குமார் 28 ரன்கள் எடுக்க எதிரணி சார்பில் பார்த்திபன் 3 விக்கெட்எடுத்தார்.
தொடர்ந்து இரண்டாவதாக களமிறங்கிய மாஸ்டர்ஸ் சிசி அணி 31.4 ஓவர்களில் 110 ரன்கள் எடுத்தது. யுவன் சங்கர் 28 ரன்கள் எடுக்க எதிரணி தரப்பில் சந்திரபோஸ் சபரிவாசன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
என்.பி.ஆர்., மைதானத்தில் நடந்த 4 வது போட்டியில் ஆரஞ்ச் கிரிக்கெட் அகாடமி அணி, திண்டுக்கல் மெஜஸ்டிக் கிரிக்கெட் கிளப் அணியுடன் மோதியது. இதில் ஆரஞ்ச் கிரிக்கெட் அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது.197 ரன்கள் எடுத்திருந்தது. சசிகுமார் அதிகபட்சமாக 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க எதிரணி தரப்பில் முத்துராமன் 3 விக்கெட்களை வீழ்த்தினார். தொடர்ந்து ஆடிய மெஜஸ்டிக் அணி 34 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்னிற்குள் சுருண்டது. முத்துராமன் 37 ரன்கள் எடுக்க எதிரணி சார்பில் கெவின் ரோஹித் 6, நிதார்சின் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி மைதானத்தில் நடந்த 5 வது போட்டியில் விக்னேஷ் ஸ்போட்ஸ் கிளப் அணி முதலில் பேட்டிங் செய்து 40 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 286 ரன்கள் எடுத்தது.
வீரர் சஞ்சய் பாலாஜி சதமடித்து 106 ரன்களோடு ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சந்தோஷ் 86 ரன்களும், சசிந்தர் 46 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய திண்டுக்கல் வுமென்ஸ் விங்ஸ் அணி 40 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. அணி சார்பில் ஜெய் சிவ ஸ்ரீ 34 ரன்கள் எடுத்தார்.