/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அம்பாத்துறை முகாமில் அவதி வருவாய்த்துறை புறக்கணிப்பால் நெரிசல்
/
அம்பாத்துறை முகாமில் அவதி வருவாய்த்துறை புறக்கணிப்பால் நெரிசல்
அம்பாத்துறை முகாமில் அவதி வருவாய்த்துறை புறக்கணிப்பால் நெரிசல்
அம்பாத்துறை முகாமில் அவதி வருவாய்த்துறை புறக்கணிப்பால் நெரிசல்
ADDED : செப் 27, 2025 04:33 AM

சின்னாளபட்டி: அம்பாத்துறையில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வருவாய்த்துறை அதிகாரிகள் புறக்கணிப்பால் பயனாளிகள் அவதிப்பட்டனர்.
தமிழக முழுவதும் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பணிச்சுமை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட, வட்டார தலைநகரங்களில் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் அறிவித்திருந்தனர். இதையடுத்து அரசு பணிகளில் பெருமளவு முடங்கின.
ஆத்துார் ஒன்றியம் அம்பாத்துறையில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பிற துறை அலுவலர்கள் மட்டுமே பங்கேற்றனர். வருவாய்த்துறை அதிகாரிகள் புறக்கணித்தனர். இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு சான்றுக்கான விண்ணப்பங்களை கொடுக்க குவிந்திருந்தனர்.
ஒப்பந்த அடிப்படை ஊழியர்கள் சிலர் வந்திருந்தனர். ஒரே நேரத்தில் அதிக பயனாளிகள் கூடிய சூழலில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், ஊராட்சி மக்கள் நலப் பணியாளர்கள், வேலை உறுதித் திட்ட பணித்தள பொறுப்பாளர்கள் கொண்டு முகாமை பெயரளவில் நடத்தினர். இதையடுத்து நெரிசல், தள்ளுமுள்ளு போன்ற காரணங்களால் பயனாளிகள் அவதிக்குள்ளாகினர். சொற்ப எண்ணிக்கையான அலுவலர்களும் மனுதாரர் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் புலம்பினர்.