/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சி.எஸ்.கே., கிரிக்கெட்: காந்திகிராம பல்கலை வெற்றி
/
சி.எஸ்.கே., கிரிக்கெட்: காந்திகிராம பல்கலை வெற்றி
ADDED : ஏப் 04, 2025 05:25 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் , சென்னை சூப்பர் கிங்ஸ் இணைந்து நடத்திய கல்லுாரிகளுக்கிடையேயான மாவட்ட கிரிக்கெட் லீக் காலிறுதிப்போட்டியில் காந்திகிராம பல்கலை வென்றது.
பி.எஸ்.என்.ஏ., ,ஆர்.வி.எஸ்., கல்லுாரி மைதானங்களில் நடந்த காலிறுதிப் போட்டியில்
திண்டுக்கல் ஜி.டி.என்., குழும அணி முதலில் பேட்டிங் செய்து 24.5 ஓவர்களில் 192 க்கு ஆல்அவுட் ஆனது. சஞ்சய்வெங்கடேஷ்வர் 79, சம்ரித் 39, அன்பரசன் 30, கமல்நாத், கமல் தலா 3 விக்கெட். சேசிங் செய்த பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி அணி 19.2 ஓவர்களில் 70 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. சபரிநாதன் 3, ராஜேஷ்கண்ணன் 3(ஹாட்ரிக்), கிேஷார் குமார் 3 விக்கெட்.
காந்திகிராம பல்கலை., அணி 25 ஓவர்களில் 213/4. கந்தசாமி 94, சபரீஸ்வரன் 36(நாட்அவுட்), நிர்மலேஸ்வர் 27. சேசிங் செய்த ஆத்துார் கூட்டுறவு அரசு கல்லுாரி 16.3 ஓவர்களில் 54 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. பாண்டியராஜன் 6 விக்கெட்.
திண்டுக்கல் ஜி.டி.என்., ஆர்ட்ஸ் கல்லுாரி அணி 29 ஓவர்களில் 140 க்கு ஆல்அவுட் ஆனது. பனபாண்டி 47, வேல்முருகன் 6 விக்கெட். சேசிங் செய்த எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரி அணி 18.2 ஓவர்களில் 60 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. மைக்லே் 4, அபிேஷக் 3 விக்கெட்.
திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., பொறியியல் கல்லுாரி அணி 13.4 ஓவர்களில் 50 க்கு ஆல்அவுட். சேசிங் செய்த நத்தம் என்.பி.ஆர்., பொறியியல் கல்லுாரி அணி 6.4 ஓவர்களில் 51/3 எடுத்து வென்றது.