/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சி.எஸ்.கே., கிரிக்கெட்; வேடசந்துார் பெட்போர்டு பள்ளி அணி வெற்றி
/
சி.எஸ்.கே., கிரிக்கெட்; வேடசந்துார் பெட்போர்டு பள்ளி அணி வெற்றி
சி.எஸ்.கே., கிரிக்கெட்; வேடசந்துார் பெட்போர்டு பள்ளி அணி வெற்றி
சி.எஸ்.கே., கிரிக்கெட்; வேடசந்துார் பெட்போர்டு பள்ளி அணி வெற்றி
ADDED : ஜன 14, 2025 10:51 PM
திண்டுக்கல்; சி.எஸ்.கே., திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் இணைந்து நடத்தும் பள்ளிகளுக்கிடையேயான லீக் போட்டியில் வேடசந்துார் பெட்போர்டு பள்ளி வெற்றி பெற்றது.
ரிச்மேன், ஆர்.வி.எஸ்., கல்லுாரி, நத்தம் என்.பி.ஆர்.,கல்லுாரி மைதானங்களில் நடந்த லீக்போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த ஒட்டன்சத்திரம் கே.ஆர்., அரசுப்பள்ளி 25 ஓவர்களில் 157/3. எழிலரசன் 52, அருண்பிரகாஷ் 34, பாலசுப்பிரமணி 31. சேசிங் செய்த திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., அகாடமி அணி 21.3 ஓவர்களில் 103 ல் ஆல்அவுட் ஆகி தோற்றது. சித்தார்த் 50, எழிலரசன் 3 விக்கெட்.
திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம்., பள்ளி அணி முதலில் பேட்டிங் செய்து 19.5 ஓவர்களில் 130 க்கு ஆல்அவுட் ஆகியது. மனோஜ்குமார் 3 விக்கெட். சேசிங் செய்த வடமதுரை அரசுப்பள்ளி 20 ஓவர்களில் 99/8 என எடுத்து தோற்றது. சுஜித்சுனில்குமார் 44, கன்வால்கிஷோர் 3 விக்கெட்.
செட்டிநாயக்கன்பட்டி அரசுபள்ளி முதலில் பேட்டிங் செய்து 25 ஓவர்களில் 167/3. தீபன் 104(நாட்அவுட்). சேசிங் செய்த திண்டுக்கல் அக்சுதா அகாடமி 25 ஓவர்களில் 78/9 மட்டுமே எடுத்து தோற்றது.
திண்டுக்கல் பிரஸித்தி வித்யோதயா பி அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 195/2. சச்சின் 107(நாட்அவுட்), தனிஷ் 62. சேசிங் செய்த அனுகிரஹா பள்ளி 20 ஓவர்களில் 72/4 எடுத்து தோற்றது.. வருண்கிருஷ்ணா 32(நாட்அவுட்)
திண்டுக்கல் பட்ஸ் ப்ளோரிஷிங்க் ஹிந்து வித்யோதயா பள்ளி 20 ஓவர்களில் 121/2. அபிநயா 48(நாட்அவுட், அஸ்ரங்கா 25. சேசிங் செய்த வேடசந்துார் பெட்போர்டு அணி 19 ஓவர்களில் 122/9 எடுத்து வென்றது. ஆனந்த் 62(நாட்அவுட்), ஜோதிபிரசித் 3.
திண்டுக்கல் நேருஜி பள்ளி 15.3 ஓவர்களில் 47 க்கு ஆல்அவுட் ஆனது. கீர்த்திவாசன் 5, சிவன்தருண் 3 விக்கெட். சேசிங் செய்த பிரஸித்தி வித்யோதயதா அணி 4 ஓவர்களிலேயே 48/1 எடுத்து வெற்றி பெற்றது. ரதீஸ் 27 (நாட்அவுட்).