/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மலைப்பூண்டு விளைச்சலில் பாதிப்பு;விவசாயிகள் கவலை
/
மலைப்பூண்டு விளைச்சலில் பாதிப்பு;விவசாயிகள் கவலை
ADDED : பிப் 15, 2024 06:08 AM

கொடைக்கானல்: -கொடைக்கானல் மேல்மலை பகுதியில் பயிரிடப்பட்ட புவிசார் குறியீடு பெற்ற மலைப் பூண்டு விளைச்சலில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கொடைக்கானல் மேல் மலைப் பகுதியான மன்னவனுார், கவுஞ்சி , வில்பட்டி, பூம்பாறை, பூண்டி கிளாவரை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் புவிசார் குறியீடு பெற்ற மருத்துவ குணம் நிறைந்த மலைப்பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் நடவு செய்யப்பட்ட மலைப்பூண்டு தற்போது அறுவடை பருவத்தை எட்டியுள்ளது. நடவு செய்தது முதல் தொடர்மழை, வறண்ட பனியின் தாக்கத்தால் பூண்டின் இலைகள் கருகி மகசூல் வெகுவாக பாதித்துள்ளது. தோட்டக்கலைத் துறையினர் பரிந்துரைத்த மருந்துகளும் ஒத்துழைக்காத நிலையில் பூண்டு விவசாயம் 70 சதவீகிதம் விளைச்சல் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் விவசாயிகள் செய்வதறியாது கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
விவசாயி ஒருவர் கூறுகையில்,வழக்கமாக செப்டம்பர் மாதம் நடவு செய்யப்படும் பூண்டிற்கு நல்ல வருவாய் கிடைக்கும். நடப்பாண்டில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் செடிகள் கருகி விளைச்சல் பாதித்துள்ளது. பூண்டு விவசாயம் செய்த விவசாயிகள் கடனில் தத்தளித்து வருகிறோம். 2023 முதல் கிலோ ரூ.400க்கு விற்ற நிலையில் தற்போது விளைச்சல் பாதிப்பால் விலை உயர்வு இருந்தாலும் நிரந்தரமாக கிடைக்கும் என்ற நிலை இல்லாததால் வெகுவாக பாதித்துள்ளோம் என்றார்.

