/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழுதாகி முடங்கிய போக்கவரத்து சிக்னல்கள்.. கவனிக்கலாமே! விபத்துக்களை தடுக்க அவசியம் நடவடிக்கை
/
பழுதாகி முடங்கிய போக்கவரத்து சிக்னல்கள்.. கவனிக்கலாமே! விபத்துக்களை தடுக்க அவசியம் நடவடிக்கை
பழுதாகி முடங்கிய போக்கவரத்து சிக்னல்கள்.. கவனிக்கலாமே! விபத்துக்களை தடுக்க அவசியம் நடவடிக்கை
பழுதாகி முடங்கிய போக்கவரத்து சிக்னல்கள்.. கவனிக்கலாமே! விபத்துக்களை தடுக்க அவசியம் நடவடிக்கை
ADDED : ஆக 20, 2024 01:02 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்கள் பழுதாகி முடங்கியதால் தொடர்ச்சியாக விபத்துக்கள் ஏற்படுகிறது. இதைத்தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் பழநி,கொடைக்கானல் இரு பகுதிகளும் சுற்றுலா தலங்கள் என்பதால் வெளி மாவட்டங்களிலிருந்து அதிகமானோர் இங்கு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பொது மக்கள் அதிகம் கூடும் பஜார் பகுதிகளிலும் காலை,மாலை நேரங்களில் வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன . நான்கு ரோடுகள் சந்திப்பு,போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் போலீசார் சார்பில் சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பல இடங்களில் சிக்னல்கள் செயல்படாமல் பழுதாகி முடங்கி உள்ளது. பல ஆண்டுகளாக இதேநிலை தொடர்வதால் வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். தொடரும் இப்பிரச்னையால் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை குழப்பத்தில் விபத்தில் சிக்கி கை,கால்களை இழக்கும் நிலை ஏற்படுகிறது. சில நேரங்களில் உயிர்சேதங்களும் நடக்கின்றன. போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் இல்லாமலிருப்பதாலும் போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். அரசியல் வாதிகள்,போலீஸ் உயர் அதிகாரிகள் வந்தால் மட்டும் எந்நேரமும் போலீசார் போக்குவரத்துகளை சீர்படுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபடுவதோடு பழுதாகி முடங்கிய சிக்னல்களை சீரமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகமும் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.
......
முறைப்படுத்துங்க
மக்கள் சாலை விதிகளை மதிக்கவில்லை என்றால் போலீசார் அபராதம் விதிக்கின்றனர். ஆனால் சிக்னல் செயல்படாமலிருப்பதால் பலரும் விபத்தில் சிக்குகின்றனர். காலை,மாலை நேரங்களில் பள்ளி,கல்லுாரி மாணவர்களின் எண்ணிக்கை ரோடுகளில் அதிகளவில் உள்ளதால் அந்த நேரங்களில் போலீசார் கட்டாயம் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட வேண்டும். இதுமட்டுமில்லாமல் சிக்னல்களில் நிறுத்தாமல் செல்லும் வாகனங்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ரோட்டோரங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்ககூடாது. நகர் முழுவதும் போலீசார் ஆய்வு செய்து எங்கெல்லாம் சிக்னல்கள் செயல்படாமல் உள்ளதோ அவற்றை சீரமைக்க வேண்டும். பள்ளிகள் அருகிலிருக்கும் ரோடை கடக்கும் ரோடுகளில் மக்கள் நடக்கும் போது வாகன ஓட்டிகள் செல்கின்றனர். இதையும் கட்டுப்படுத்த வேண்டும்.
ஜமால் முகமது,மாநில செயலாளர்,ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம்,திண்டுக்கல்.
........