/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் சேதமான ரோடுகள் தரமற்ற பணியால் அலங்கோலம்
/
'கொடை'யில் சேதமான ரோடுகள் தரமற்ற பணியால் அலங்கோலம்
'கொடை'யில் சேதமான ரோடுகள் தரமற்ற பணியால் அலங்கோலம்
'கொடை'யில் சேதமான ரோடுகள் தரமற்ற பணியால் அலங்கோலம்
ADDED : ஜன 07, 2024 07:01 AM

கொடைக்கானல்: கொடைக்கானலில் தரமற்ற பணியால் உடனுக்குடன் ரோடுகள் சேதமதவைதால் வாகன ஒட்டிகள் அவதிடைவதோடு பாதி வழியில் வாகனங்கள் பழுதாகி நிற்கும் பரிதாபமும் அரங்கேறுகிறது.
கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இங்குள்ள ரோட்டிற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன.
இருந்த போதும் ரோட்டின் தரம் உயர்ந்தபாடில்லை. தரமற்ற பணிகளால் ரோடுகள் நாளுக்கு நாள் மோசமடைந்த நிலையே உள்ளது. பொதுவாக ரோடுகள் அமைத்து 5 ஆண்டுகள் தாக்குப் பிடிக்க வேண்டும் என்பது நிபந்தனை.
கொடைக்கானலை பொருத்தமட்டில் அமைக்கப்பட்ட சில மாதங்களிலே வாய் பிளந்து குண்டு, குழியுமாக மாறி வாகன ஓட்டிகளை பதம் பார்க்கும் நிலையிலே உள்ளது.
சில ஆண்டிற்கு முன் பெருமாள்மலை - டைகர் சோலையில் அமைக்கப்பட்ட ரோடு தரமற்ற நிலையில் அன்றே சேதமடைந்தது. இதை அன்றே தினமலர் சுட்டிக்காட்டியது. இருந்த போதும் பெயரளவிற்கு பஞ்சர் பார்க்கப்பட்டு வாகனங்கள் சென்று வந்தன.
மழை காலங்களில் வடிகால் வசதியின்றி ரோட்டில் தேங்கும் மழை நீரால் எளிதில் ரோடுகள் சேதம் அடைகின்றன. பெருமாள்மலை - வெள்ளி நீர்வீழ்ச்சி வந்தடையும் குறுகிய ரோட்டில் இது போன்ற நிலையால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகுவதும், வாகனங்கள் பழுதாகி நிற்கும் அவலம் உள்ளது.
மலைப் பகுதியில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்படுவது விபத்திற்கு வழிவகுக்கும் என்ற நிலையில் அவை பதிக்கப்பட்டு அவ்வப்போது வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.
இது போன்ற நிலையே தாண்டிக்குடி கீழ்மழை, கொடைக்கானல் மேல் மலைப் பகுதி ரோடுகளில் உள்ளன. சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த அப்சர்வேட்டரி ரோட்டின் அலங்கோல நிலையால் சுற்றுலா வரும் வாகன ஓட்டிகள் நொந்து கொள்ளும் அளவிற்கு ரோட்டின் தரம் உள்ளது. இன்ப சுற்றுலாவிற்கு வருகை தரும் பயணிகள் ரோட்டின் நிலை கண்டு நொந்து கொள்ளும் நிலையிலேயே ஊர் திரும்புகின்றனர்.
இது குறித்து புகார் அளித்தும் நெடுஞ்சாலைத்துறை மவுனமாக உள்ளது. இதற்கு கூடுதல் கமிஷன் கொடுத்து ரோடு ஒப்பந்தம் பெறுவதே தரமற்ற ரோடு அமைய காரணமாக உள்ளது.
கொடைக்கானலில் தரமான ரோடு அமைய கமிஷன் இல்லாத நிலை நீடித்தால் மட்டுமே ரோட்டின் தரம் உயரும் அதிகாரிகளும் கண்டிப்பு காட்ட முற்படுவர்.
2023ல் இருமுறை ஆளுநர் வருகையின் போது அவசர கதியில் ரோடுகள் சீரமைக்கப்பட்டன. அதன் பின் ரோடு பணிகள் எதுவுமின்றி நெடுஞ்சாலை துறை ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது.
கொடைக்கானல் நெடுஞ்சாலை உதவி செயற் பொறியாளர் ராஜன்: பெருமாள்மலையிலிருந்து டைகர் சோலை ரோடு தற்போது ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தற்காலிகமாக சேதம் அடைந்த ரோட்டில் பேட்ஜ் வொர்க் பார்க்கும் பணி விரைவில் துவங்க உள்ளது.
தொடர்ந்து இந்த ரோட்டை அகலப்படுத்தும் திட்டமும் கைவசம் உள்ளதால் இதில் ஆய்வு செய்து ரோடு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.