/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமான ரோடுகள், பயனற்ற சுகாதார வளாகங்கள் பரிதவிப்வில் பாகாநத்தம் ஊராட்சி மக்கள்
/
சேதமான ரோடுகள், பயனற்ற சுகாதார வளாகங்கள் பரிதவிப்வில் பாகாநத்தம் ஊராட்சி மக்கள்
சேதமான ரோடுகள், பயனற்ற சுகாதார வளாகங்கள் பரிதவிப்வில் பாகாநத்தம் ஊராட்சி மக்கள்
சேதமான ரோடுகள், பயனற்ற சுகாதார வளாகங்கள் பரிதவிப்வில் பாகாநத்தம் ஊராட்சி மக்கள்
ADDED : பிப் 19, 2025 03:54 AM

- வடமதுரை : சேதமடைந்த ரோடுகள், போதியளவு போக்குவரத்து வசதி இல்லாமை, பயனற்று கிடக்கும் வளர்ச்சி திட்ட பணிகளால் பாகாநத்தம் ஊராட்சி மக்கள் சிரமப்படுகின்றனர்.
வடமதுரை ஒன்றியத்தில் வரி வருமானம் குறைவாக இருக்கும் ஊராட்சிகளுள் ஒன்று பாகாநத்தம்.
இங்கு கோவிலாத்துபட்டி, கிழக்கு மலைப்பட்டி, பா.புதுார், தோப்பூர், ஜங்கால்பட்டி, ஒத்தப்பட்டி, மேற்கு மலைப்பட்டி, களத்துார், சத்யா நகர், முல்லாம்பட்டி, சவடகவுண்டன்பட்டி, துாங்கனம்பட்டி, செங்காடு, பாறைக்களம், குண்டாம்பட்டி, பாகாநத்தம், ராஜபுரம் என கிராமங்கள் உள்ளன. இங்கு நாகையகோட்டை ஊராட்சியை இணைக்கும் ராஜபுரம் ரோடு, தோப்பூரில் இருந்தும் பாகாநத்தம் குளம் பகுதிக்கு செல்லும் ரோடு, ஜங்கால்பட்டி மலைப்பட்டி ரோடு ஆகியன சேதமடைந்து போக்குவரத்திற்கு சிரமம் தருகின்றன.
இதனால் திறந்தவெளிகளை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை பரவலாக உள்ளது.
பாதையை மேம்படுத்துங்க
-வி.செல்வராஜ், நிறுவனர், மகாத்மா காந்தி கிராம பொருளாதார வளர்ச்சி அறக்கட்டளை, ஜங்கால்பட்டி: ஜங்கால்பட்டியில் ரேஷன் கடை, பள்ளிக்கூடம் இல்லாததால் கொம்பேரிபட்டிக்கு செல்ல வேண்டி உள்ளது. மயானம் பிலாத்து பகுதி ஓடைக்குள் இருப்பதால் பராமரிப்பின்றி கிடக்கிறது. பயணியர் நிழற்கூடம் சேதமடைந்து கிடக்கிறது. இப்பகுதி வழியே இயக்கப்படும் பஸ் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். பிலாத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல ஒத்தப்பட்டி பகுதியினர் அதிகம் பயன்படுத்தும் ஆண்டிகுளம் வழியே செல்லும் வண்டிப்பாதையை மேம்படுத்த வேண்டும்.
சேதமான ரோடு
து.வெள்ளையன், அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய கவுன்சிலர், மலைப்பட்டி: மலைப்பட்டிக்கு வந்து செல்லும் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மேற்கு மலைப்பட்டி, தோப்பூரில் அங்கன்வாடி மையம் சேதமடைந்துள்ளது. கிழக்கு, மேற்கு மலைப்பட்டியில் இரு அங்கன்வாடி மையங்கள் இடித்து அகற்றப்பட்ட நிலையில் புதியது கட்டப்படாமல் உள்ளது. மலைப்பட்டி ஜங்கால்பட்டி ரோடு சேதமடைந்து கிடப்பதால் மக்களுக்கு அதிக சிரமம் உள்ளது. பாகாநத்தம் காலனி பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்கூடமும், குண்டாம்பட்டி ரோட்டில் சேதமான பாலத்தையும் சீரமைக்க வேண்டும்.
-அடிக்கடி நடக்குது விபத்துக்கள்
எம்.செல்வவடிவேல், அ.தி.மு.க., மாணவரணி ஒன்றிய செயலாளர், ஒத்தப்பட்டி : அய்யலுார் எரியோடு ரோட்டில் இருந்து துாங்கனம்பட்டி ரோடு பிரியும் இடம் வளைவான பகுதியாக உள்ளது. இதனால் இங்கு அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. ரோட்டை அகலப்படுத்தி மையத்தில் சென்டர் மீடியன் அமைப்பை உருவாக்க வேண்டும். அய்யலுார் எரியோடு மினி பஸ் சேவையை மீண்டும் துவக்க வேண்டும். துாங்கனம்பட்டியில் இருந்து பஞ்சாயத்து தோப்பு வரை வண்டி பாதையை மேம்படுத்தி தார் ரோடாக்க வேண்டும்.