/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்க முடிவு
/
தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்க முடிவு
தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்க முடிவு
தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்க முடிவு
ADDED : அக் 26, 2024 05:38 AM
திண்டுக்கல்: தீபாவளியின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திண்டுக்கல் பைபாஸ் பகுதிகளில் வெளியூர் செல்லும் பயணிகளுக்காக தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
திண்டுக்கல் நகரில் தீபாவளியின் போது மாநகராட்சி ரோடு,காமராஜர் சிலை ரோடு,பூ மார்க்கெட் ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் திருச்சி, மதுரை,தேனி உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து திண்டுக்கல் வரும் பஸ்கள் தலைமை போஸ்ட் ஆபிஸ் ரோடு உள்ளிட்ட வெவ்வேறு வழிகளில் பாதை மாற்றி அனுப்பப்படுகிறது.
இதுதவிர நகரிலும் மக்கள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் தாங்கள் போய் சேரும் இடத்திற்கு செல்ல முடியாமல் மணிக்கணக்கில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.
இந்தாண்டு தீபாவளி இன்னும் சில நாட்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில் திண்டுக்கல் மண்டல போக்குவரத்து கழகம் சார்பில் பயணிகளுக்காக 400 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
திண்டுக்கல் டூ சென்னை,மதுரை,விழுப்புரம்,கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் இவைகள் நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் பஸ் ஸ்டாண்டிலிருந்து பேகம்பூர் வழியாக மதுரை பைபாஸ் செல்ல திண்டாடுகின்றன.
தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்காலங்களில் திருச்சி, மதுரை போன்ற பெரிய மாவட்டங்களில் வெளியூர் செல்லும் பயணிகளுக்காக பைபாஸ் பகுதிகளில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கின்றனர்.
அந்த நேரத்தில் நகருக்குள் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் வராமல் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்திலும் இதேபோல் தற்காலிக பஸ் ஸ்டாண்ட்கள் அமைக்க போக்குவரத்து கழகம் திட்டுமிட்டுள்ளது.