/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் கட்டமைப்பை மேம்படுத்த முடிவு: சுற்றுலாத்துறை கமிஷனர் தகவல்

ADDED : அக் 18, 2024 03:24 AM

கொடைக்கானல்:''கொடைக்கானலில் சுற்றுலா கட்டமைப்பை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது'' என சுற்றுலாத்துறை கமிஷனர் சமயமூர்த்தி கூறினார்.
கொடைக்கானலில் வட்டக்கானல், பிரையன்ட் பூங்கா, பஸ் ஸ்டாண்ட், வெள்ளி நீர்வீழ்ச்சி, செண்பகனுார் பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட உள்ள கார் பார்க்கிங் இடங்களை ஆய்வு செய்த அவர் கூறியதாவது: கொடைக்கானல் , ஊட்டி, ஏற்காடு சுற்றுலா தலங்களில் கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொடைக்கானலில் நடைமுறையில் உள்ள இ பாஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மலையடிவாரம் ,ரோட்டோரங்களில் க்யூஆர் கோடு அறிமுகப்படுத்தும் பதாகை வைக்கப்பட உள்ளது.
புதிய ரோடு, புதிய சுற்றுலா தலங்களை அறிமுகப்படுத்தலும் மேம்பாடு திட்டத்தில் அடங்கும். கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள இரு அருவிகளில் கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு சுற்றுலாவை மேம்படுத்தும் சாத்தியக்கூறுகள் குறித்து அனைத்துறை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டது என்றார். கலெக்டர் பூங்கொடி, எஸ்.பி., பிரதீப் உடனிருந்தனர்.