தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு 'சீல்' வைக்க தாமதம்

 எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு 'சீல்' வைக்க தாமதம்

 எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு 'சீல்' வைக்க தாமதம்


ADDED : மார் 16, 2026 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 06:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்தூர்: தேர்தல் நடத்தை விதி காரணமாக ஆத்தூர் எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு சீல் வைக்க அதிகாரிகள் வந்த போது பூட்டின் சாவி கிடைக்காததால் காலதாமதம் ஆனது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து நேற்று மாலை நடத்தை விதிகள் உடனே அமல்படுத்தப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் தொகுதிக்கு உட்பட்ட ஏழு பேரூராட்சிகள், ஆத்தூர் ரெட்டியார்சத்திரம் ஒன்றியங்களில் உள்ள 45 கிராம ஊராட்சிகளில் அதிகாரிகள் நடத்த விதிகளை கண்காணிக்க முடுக்கி விடப்பட்டனர்.

அரசு அலுவலகங்களில் முதல்வர் முன்னாள் முதல்வர் படங்கள், அரசு திட்டங்களின் விளம்பர பதாகைகள், அரசியல் கட்சிகளின் போர்டுகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன.

செம்பட்டாயில் உள்ள ஆத்தூர் எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு சீல் வைக்க வருவாய்த்துறை அதிகாரிகள் வந்தனர். வெளிப்புற கேட் பூட்டப்பட்ட நிலையில் சாவி இல்லாததால் நடவடிக்கையை கைவிட்டனர். பின்னர் இரவு 9.00 மணிக்கு மீண்டும் எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு வந்த அதிகாரிகள் வெளிப்புற கேட் திறக்கப்பட்டிருந்த நிலையில் சீல் வைத்து சென்றனர்.

நிலக்கோட்டை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு நிலக்கோட்டை எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி, சேவுகம்பட்டி, நிலக்கோட்டை, அம்மையநாயக்கனூர் பேரூராட்சி அலுவலகங்கள், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு பி.டி.ஓ., அலுவலகங்கள், பிற அரசு அலுவலகங்களில் இருந்த முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி படங்கள் அகற்றப் பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us