/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளில்.. தொய்வு: பேட்ஜ் ஒர்க் மட்டுமே நடப்பதால் அதிருப்தி
/
மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளில்.. தொய்வு: பேட்ஜ் ஒர்க் மட்டுமே நடப்பதால் அதிருப்தி
மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளில்.. தொய்வு: பேட்ஜ் ஒர்க் மட்டுமே நடப்பதால் அதிருப்தி
மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளில்.. தொய்வு: பேட்ஜ் ஒர்க் மட்டுமே நடப்பதால் அதிருப்தி
ADDED : செப் 09, 2025 04:31 AM

கொடைரோடு: திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைகளில் விரிவாக்கப்பணிகளில் ஏற்பட்டுள்ள தொய்வால் ரோடுகள் குண்டும், குழியுமாக மாறுகின்றன. இதனை புதிதாக அமைக்காமல் பேட்ஜ் ஒர்க் பணிகள் மட்டுமே நடப்பதால் பொதுமக்களிடையே அதிருப்தி நிலவுகிறது.
வத்தலக்குண்டிலிருந்து உசிலம்பட்டி, பெரியகுளம் கொடைரோட்டிலிருந்து கொடைக்கானல், நிலக்கோட்டை - செம்பட்டி, நிலக்கோட்டை- விளாம்பட்டி, பள்ளப்பட்டியில் இருந்து கொடைக்கானல் செல்லும் ரோடு உள்ளிட்ட மாவட்டத்தில் பிற பகுதிகளில் மாநில நெடுஞ்சாலை உள்ளன. மத்திய அரசால் ஆணையம் அமைக்கப்பட்டு திண்டுக்கல், குமுளி நான்கு வழிச்சாலைக்கு விரிவான திட்ட அறிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆங்காங்கே பல நான்கு வழிச்சாலை பணிகளும் நடந்து வருகின்றன. ஆனால் தி.மு.க., ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து மாநில நெடுஞ்சாலைகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தின் சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு செல்லும் ரோடு 5 ஆண்டுகளுக்கு மேலாக புதுப்பிக்கப்படாமல் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. அவ்வப்போது பேட்ஜ் ஒர்க் பணிகள் மட்டுமே நடக்கிறது. தென் மாவட்டங்களில் இருந்து கொடைக்கானல் சுற்றுலா வரும் பயணிகள் உசிலம்பட்டி- வத்தலகுண்டு ரோடை பயன்படுத்துகின்றனர். இந்த ரோடும் சேதமடைந்து உள்ளது. இங்கு 'பேட்ஜ் ஒர்க்' கூட இல்லை.இதனால் மக்கடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
.........
பிளவு பட்டது போல் ...
கொடைரோடு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கொடைக்கானல் அடிவாரம் வரை உள்ள ரோடு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக புதுப்பிக்கப்படாமல் உள்ளது. குறிப்பாக மல்லணம்பட்டி, கரியாம்பட்டி, வெங்கடாஸ்திரிகோட்டை பகுதியில் ரோடு பிளவு பட்டது போன்று பெயர்ந்து உள்ளது. கொடைரோட்டில் இருந்து வத்தலக்குண்டு வரை உள்ள ரோடை புதுப்பிக்க ரூ. 350 கோடி ஒதுக்கப்பட்டதாக செய்தி வெளியானது. ஆனால் பணி எதுவும் துவங்கவில்லை. நெடுஞ்சாலை துறையினர் மாநில நெடுஞ்சாலைகளை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, முன்னாள் ஊராட்சி தலைவர், எத்திலோடு