UPDATED : அக் 15, 2026 03:08 PM
ADDED : அக் 15, 2026 03:06 PM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகராட்சி எரிவாயு மயானம் செல்லும் ரோடு சேதமடைந்த நிலையில், அங்கு சீமை கருவேல மரங்கள் ஏராளமாக வளர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோட்டில் இருந்து எரிவாயு மயானத்திற்கு தார் ரோடு செல்கிறது. காவேரியம்மாபட்டி, பெரியகோட்டை, தேவத்துார் உட்பட வழியிடை கிராமங்களுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த ரோடு சேதமடைந்து பெரிய பள்ளங்களுடன் காணப்படுகிறது. ரோட்டின் ஓரம் சீமை கருவேல மரங்கள் ஏராளமாக வளர்ந்துள்ளன. இவை ரோட்டை மறைப்பதால் எதிர்ப்புறம் வரும் வாகனங்கள் சரிவர தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே ரோட்டை சீரமைப்பு செய்து அங்கு வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
