ADDED : அக் 15, 2026 04:06 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார்: அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வேடசந்துார் ஒன்றிய அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் சிவகாமி முன்னிலை வகித்தார். அனைத்து ஊராட்சிகளிலும் 125 நாள் வேலை திட்டத்தை துவங்க வேண்டும், நிலுவையில் உள்ள 100 நாள் வேலைக்கான ஊதியத்தை வழங்க வேண்டும், குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மாவட்ட தலைவர் பாலாஜி, விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் சாவடமுத்து, மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் ராகேஷ், மாதர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் பொன்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
