ADDED : பிப் 08, 2024 05:14 AM

திண்டுக்கல் : அரசு பள்ளி மாணவர்களுக்கு செயல்படும் உயர் கல்வியில் இட ஒதுக்கீடு, கட்டணமில்லா ஆங்கில வழிக்கல்வி உளளிட்ட அனைத்து நலத்திட்டங்களையும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்க வேண்டும்.
மாணவர் எண்ணிக்கைகேற்ப அரசு அனுமதித்த காலிபணியிடங்களை எவ்விதத் தடையுமின்றி நிரப்பிட பள்ளிக் கல்வித்துறை ஒப்புதல் அளிப்பதோடு, சிறுபான்மை பள்ளிகளில் நியமன பெற்று ஊதியமின்றி பணிபுரியும் அனைத்து நிலை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு நியமன நாள் முதல் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடந்தது. முதன்மை கல்வி அலுவலகம் முன் நடந்த தனியார் நிர்வாகிகள் சங்க மாநில உதவிச்செயலர் பத்மநாபன் தலைமை வகித்தார். தலைவர் அமல்ராஜ் முன்னிலை வகித்தார். நிர்வாகி ஆல்பர்ட பீட்டர்ராஜ் ஒருங்கிணைத்தார். நிர்வாகி மசபியர் அன்பரசி நன்றி கூறினார்.

