ADDED : நவ 15, 2026 07:10 PM

அ நிறம் | அளவு
செந்துறை: செந்துறையில் தமிழர்தேசம் கட்சி சார்பில், மாமரத்துபட்டியில் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட நபரை சரித்திர பதிவேடு குற்றவாளியை போல் நடத்தியதை கண்டித்தும், முறையாக விசாரணை நடத்தக் கோரியும், 13 பேர் மீதான கைது நடவடிக்கையை போலீசார் கைவிட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கட்சியின் தலைவர் செல்வக்குமார் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பூமி, மாவட்டச் செயலாளர் பிரபு முன்னிலை வகித்தனர். கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று, போலீசாரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
