தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மாவட்ட நெடுந்துார ஓட்டப் போட்டி:- 300 பேர் பங்கேற்பு

மாவட்ட நெடுந்துார ஓட்டப் போட்டி:- 300 பேர் பங்கேற்பு

மாவட்ட நெடுந்துார ஓட்டப் போட்டி:- 300 பேர் பங்கேற்பு


ADDED : நவ 15, 2026 05:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2026 05:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் இளைஞர், இளம்பெண்கள் இடையே உடல் நலன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்ட நெடுந்துார ஓட்டப் போட்டி இன்று (நவ.,15) நடந்தது.

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், உடல் நலம் பேணுதல், உடற்பயிற்சி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவில் நெடுந்துார ஓட்டப் போட்டி கலெக்டர் முகாம் அலுவலகம் அருகே இன்று நடந்தது. இதனை, கலெக்டர் துர்கா கொடி அசைத்து துவக்கி வைத்தார். 17 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்கள், 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் என, 2 பிரிவுகளாக ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே போட்டிகள் நடந்தன. ஆண்களுக்கான நெடுந்துார போட்டி கலெக்டர் முகாம் அலுவலகத்தில் துவங்கி வெள்ளை விநாயகர் கோயில், ஜான்பால் பள்ளி, ஆர்.எம்., காலனி வழியே எம்.வி.எம்., கல்லுாரியில் நிறைவு பெற்றது. பெண்களுக்கான போட்டி கலெக்டர் முகாம் அலுவலகத்தில் துவங்கி ஆர்த்தி தியேட்டர் ரோடு, ஜான்பால் பள்ளி வழியே எம்.வி.எம்., கல்லுாரி வளாகத்தில் நிறைவடைந்தது. போட்டியில் வெற்றிப் பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம், ஆறுதல் பரிசாக 4 முதல் 10 இடங்கள் பிடித்தவர்களுக்கு தலா ரூ.ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை, தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பரிசுத் தொகைகள் வெற்றி பெற்றவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது. இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, தடகள பயிற்சியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us