ADDED : அக் 16, 2026 08:16 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி மரியன்னை தொடக்கப்பள்ளியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாநகராட்சி துப்புரவு அலுவலர் தங்கவேல் தலைமை வகித்தார்.
சுகாதார ஆய்வாளர் செல்வராணி டெங்கு காய்ச்சல் பரவும் முறை, கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழித்தல், பாதுகாப்பு வழிமுறைகள், குப்பையை நான்கு வகையான தரம் பிரித்து வழங்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.
துப்புரவு அலுவலர், ஆய்வாளர், தலைமை ஆசிரியை இணைந்து மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினர். பொது சுகாதார பரப்புரையாளர்கள் மஞ்சுளா, திவ்யா, மேற்பார்வையாளர்கள் பொன்னையா, ராகுல் ஆகியோர் பங்கேற்றனர்.
