/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கார் விபத்தில் காயமடைந்த துணை ஆட்சியர் இறப்பு
/
கார் விபத்தில் காயமடைந்த துணை ஆட்சியர் இறப்பு
ADDED : ஏப் 23, 2025 02:45 AM

வேடசந்துார்:வேடசந்துார் அருகே கார் விபத்தில் காயமடைந்து தொடர் சிகிச்சையில் இருந்த துணை ஆட்சியர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
நாமக்கல் மாவட்டம், மோகனுார் சர்க்கரை ஆலையில் துணை ஆட்சியராக பணியில் இருந்தவர் சிவக்குமார், 46. திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஆர்.டி.ஓ.,வாகவும் பணி செய்துள்ளார். இவரது சொந்த ஊர் மதுரை மாவட்டம், அலங்காநல்லுார் அருகே பெரிய சேராவூரி.
இவர், பிப்., 5ல் இரவு, 8:00 மணிக்கு, வேடசந்துார், ஐயர்மடம் அருகே காரை ஓட்டிச் சென்றார். முன்னால் சென்ற டிராக்டரின் பின்பகுதியில் மோதியதில், காயமடைந்த சிவக்குமார், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று அதிகாலை இறந்தார். வேடசந்துார் எஸ்.ஐ., அருண் நாராயணன் விசாரிக்கிறார்.