/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திருவிழாவில் -பக்தர்கள் நேர்த்திக்கடன்
/
திருவிழாவில் -பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED : மார் 31, 2025 07:33 AM

கோபால்பட்டி : கோபால்பட்டி செடிபட்டி ஆத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்தல் , புனித நீராடி பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.
தோரண மரம் ஊன்றுதல், தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை பூஜைகள் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து கோவில் வீட்டிலிருந்து தீச்சட்டி, பால்குடம், அலகு குத்துதல், அங்கப் பிரதட்சணம் எடுத்து அரோகரா கோஷத்துடன் முக்கிய வீதிகள் வழியாக வந்து ஆத்து மாரியம்மன் கோவிலில் ஸ்தாபிதம் செய்தனர். அம்மனுக்கு பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல் நடந்தது.
இரவு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நாளை காலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கிராம மக்கள், அறக்காவலர் பூசாரிகள் சக்தி, முருகன், கணேசன், கார்த்திசாமி, கிருஷ்ணமூர்த்தி செய்தனர்.