/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் பேட்டரி வாகனங்களுக்கு காத்திருக்கும் பக்தர்கள்
/
பழநியில் பேட்டரி வாகனங்களுக்கு காத்திருக்கும் பக்தர்கள்
பழநியில் பேட்டரி வாகனங்களுக்கு காத்திருக்கும் பக்தர்கள்
பழநியில் பேட்டரி வாகனங்களுக்கு காத்திருக்கும் பக்தர்கள்
ADDED : டிச 26, 2024 01:08 AM

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்தநிலையில் கிரி வீதியில் பேட்டரி கார்,பஸ்களுக்காக பக்தர்கள் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பழநி முருகன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கிரிவீதியில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
பேட்டரி கார், பஸ் என 25 வாகனங்கள் மூலம் கோயில் நிர்வாகத்தின் சார்பில் இலவசமாக பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
சில நாட்களாக பாதயாத்திரை பக்தர்கள் வருகை, ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. கிரி வீதியில் ரோப் கார் வின்ச் சுற்றுலா வாகன நிறுத்தங்கள், பூங்கா ரோடு சந்திப்பு, அய்யம்பட்டி ரோடு சந்திப்பு, பாத விநாயகர் கோயில் ஆகிய பகுதிகளில் இலவச பேட்டரி கார், பஸ்சுக்காக பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கின்றனர்.
பக்தர்களின் காத்திருப்பை தவிர்க்க பேட்டரி கார், பஸ்களின் நேர அறிவிப்பு பலகையை கோயில் நிர்வாகம் வைக்க வேண்டும் கூடுதலான வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.