/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மக்கள் நலமுடன் வாழ சைக்கிளில் ஆன்மிக பயணம் செல்லும் பக்தர் நாடு முழுவதுமுள்ள கோயில்களில் வழிபாடு

ADDED : அக் 05, 2024 04:38 AM

வடமதுரை: மக்கள் நலமுடன் வாழ வேண்டி கடலுார் மாவட்டம் இ.ராமநாத குப்பத்தை சேர்ந்த ராயர் 70, நாடு முழுதும் 5 ஆண்டுகளாக சைக்கிளில் ஆன்மிக பயணம் மேற்கொண்டு கோயில்களில் வழிபாடு செய்து வருகிறார். நேற்று அவர் திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார் வழியாக பழநி சென்றார்.
ராயர் மகன், மகள்களுக்கு திருமணமாகி செட்டிலாகி விட்டனர். ஐந்தாண்டுகளுக்கு முன் சைக்கிளில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு முக்கிய வழிபாட்டு தலங்களுக்கு ஆன்மிக பயணத்தை ராயர் துவக்கினார். ஒவ்வொரு கோயில்களிலும் சில நாட்கள் தங்கி அங்கிருந்து மற்ற இடங்களுக்கு பயணத்தை தொடர்கிறார். எழுத்தறிவு இல்லாத நிலையில் செல்லும் இடங்களில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பயணத்திற்கு உதவும் வகையில் அந்தந்த உள்ளூர் மொழிகளில் அதிகாரிகளிடம் ஒரு நோட்டில் குறிப்புகளை எழுதி பெற்று கொள்கிறார் ராயர்.
கடந்த சில நாட்களுக்கு முன் அயோத்தி ராமர் கோயில் சென்றவர் அங்கிருந்து ராமர், தேசிய கொடியுடன் தமிழகம் திரும்பினார். தற்போது பழநி முருகன் கோயிலுக்கு அய்யலுார் வழியாக சென்றார்.
அவர் கூறியதாவது : 65வது வயதில் 5 ஆண்டுகளுக்கு முன் இந்த ஆன்மிக பயணத்தை துவக்கினேன். கோயில் கோயிலாக சென்று வருகிறேன். முன்பு தினமும் 200 கி.மீ., வரை சைக்கிளில் பயணிப்பேன். தற்போது 100 கி.மீ., வரை பயணிக்கிறேன். ஒவ்வொரு கோயில்களிலும் மக்கள் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்வேன் என்றார்.