/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் நாளை கந்த சஷ்டி சூரசம்ஹாரம் பக்தர்களுக்கு காலை 11:00 மணிக்கு மேல் அனுமதி இல்லை
/
பழநியில் நாளை கந்த சஷ்டி சூரசம்ஹாரம் பக்தர்களுக்கு காலை 11:00 மணிக்கு மேல் அனுமதி இல்லை
பழநியில் நாளை கந்த சஷ்டி சூரசம்ஹாரம் பக்தர்களுக்கு காலை 11:00 மணிக்கு மேல் அனுமதி இல்லை
பழநியில் நாளை கந்த சஷ்டி சூரசம்ஹாரம் பக்தர்களுக்கு காலை 11:00 மணிக்கு மேல் அனுமதி இல்லை
ADDED : அக் 26, 2025 02:12 AM
பழநி: பழநி முருகன் கோயிலில் நாளை மாலை அடிவாரம் கிரிவீதியில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது .இதையொட்டி கோயிலில் காலை 11:00 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
இக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்.22ல் துவங்கியது. சூரசம்ஹாரம் நாளை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு முருகன் கோயிலில் அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4:30 க்கு விளாபூஜை, மதியம் 12:00க்கு உச்சிக்காலபூஜை, மதியம் 1:30க்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது. மதியம் 3:00 மணிக்கு மேல் மலைக்கொழுந்து அம்மன் சன்னதியில் நடக்கும் பராசக்தி வேல் வாங்குதல் நிகழ்ச்சிக்குபின் பின் கோயில் நடை சாத்தப்படுகிறது. இக்கோயிலில் இருந்து சின்னகுமாரசுவாமி, பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து வள்ளி,தெய்வானை, முத்துக்குமாரசுவாமி அடிவாரம் எழுந்தருள மாலை 6:00 மணிக்கு வடக்கு கிரிவீதியில் நான்கு சூரர்களை சின்ன குமாரசுவாமி வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழாவுக்குப் பின் சுவாமி கோயிலுக்கு வர ராக்கால பூஜை நடக்கிறது. அக்.28 காலை 10:30 மணிக்கு முருகன் கோயிலில் வள்ளி,தெய்வானை சண்முகருக்கு திருக்கல்யாணம், இரவு 7:00 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நாளை காலை 11:30 மணிக்கு அனைத்து கட்டண சீட்டு வழங்கல் நிறுத்தப்படுகிறது . படிப்பாதை,வின்ச்,ரோப்காரில் பக்தர்கள் முருகன் கோயிலுக்கு செல்ல காலை 11:00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர் .அன்று இரவு தங்கரத சுவாமி புறப்பாடும் நடைபெறாது.

